நிலத்தகராறு காரணமாக மாறி மாறி அரிவாளால் வெட்டிக்கொண்ட இரு குடும்பத்தினர்
தென்காசி, 13 ஆகஸ்ட் (ஹி.ச.) தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் அருகே உள்ள ராஜகோபாலபேரி என்கின்ற பகுதியில் வசித்து வரும் 2 குடும்பத்தினர் இடையே நீண்ட நாட்களாக நில தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த நிலம் தொடர்பாக இன்று காலை
VK Pudur Police Station


தென்காசி, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் அருகே உள்ள ராஜகோபாலபேரி என்கின்ற பகுதியில் வசித்து வரும் 2 குடும்பத்தினர் இடையே நீண்ட நாட்களாக நில தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த நிலம் தொடர்பாக இன்று காலை இரண்டு குடும்பத்தினர் இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி அரிவாளால் வெட்டி தாக்கி கொண்டனர்.

இதில் இரு தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்ட நிலையில், இரண்டு நபர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில், இரண்டு நபர்களும் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், படுகாயம் அடைந்த நடராஜன் (வயது 58) என்பவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பரமசிவன் (வயது 60) என்பவர் தற்போது தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN