வெற்றி தமிழ்நாடு தொழில்துறை மாநாடு – 97 நிறுவனங்களுடன் இன்று ஒப்பந்தம்
சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் “வெற்றி தமிழ்நாடு” என்ற தலைப்பில் தொழில்துறை மாநாடு இன்று சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்க
Chennai CM


Hh


சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் “வெற்றி தமிழ்நாடு” என்ற தலைப்பில் தொழில்துறை மாநாடு இன்று சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரூ.67,452 கோடி முதலீட்டில் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் இந்த தொழில் திட்டங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக தொழில் நிறுவனங்கள் அதிகளவில் அமைக்கப்படும் மாவட்டங்களைத் தவிர்த்து, புதிய மாவட்டங்களிலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இன்றைய மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆட்சி அமைத்த 100 நாட்களுக்குள் தவெக அரசு, தொழில்துறையில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / P YUVARAJ