Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
நடிகர் விக்ரமன், அரிய வகையைச் சேர்ந்த லார் கிப்பான் குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, அந்தக் குரங்கை வழங்கியதாக கூறப்படும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கேசவநாதன் என்பவருக்கு வனத்துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
லார் கிப்பான் அரிய வகை குரங்கை அவர் எவ்வாறு பெற்றார், அதற்கான உரிமம் மற்றும் ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, நாளை மாலைக்குள் குரங்கை வைத்திருப்பதற்கான உரிமை மற்றும் அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வனத்துறையிடம் சமர்ப்பிக்குமாறு கேசவநாதனுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் சமர்ப்பிக்கும் ஆவணங்களை வனத்துறையினர் முழுமையாக சரிபார்த்த பின்னர், குரங்கை வைத்திருப்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டதா என்பது குறித்து முடிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரமன் அரிய வகை குரங்குடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற நிலையில், தற்போது குரங்கின் உரிமை மற்றும் அதனை வைத்திருப்பதற்கான சட்டப்பூர்வ அனுமதி தொடர்பாக வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam