Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 82 ஆயிரத்து 800 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 27 ஆயிரத்து 525 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்றைய தினம் கோவில் உண்டியலில் ரூ.4 கோடியே 68 லட்சம் காணிக்கையாக வசூலானது.
பக்தர்களுக்காக 4 லட்சத்து 34 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. மேலும், 2 லட்சத்து 54 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. அஸ்வினி மருத்துவமனையில் 2 ஆயிரத்து 699 பக்தர்கள் மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
இதற்கிடையே, திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளும் பக்தர்களால் நிரம்பின.
தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட ‘டைம் ஸ்லாட்’ டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்துக்கு வந்த பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக 12 முதல் 15 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA