Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
கொரட்டூரில் தனியார் அறக்கட்டளையின் 4-ம் ஆண்டு தொடக்க விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், சமூக நலப் பணிகளில் தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்பு முக்கியமானது என்றும், இதுபோன்ற சேவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஜே.சி.டி. பிரபாகரன், தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்தபோது, இந்த ஆட்சி வருமா, வராதா என்ற நம்பிக்கையற்ற சூழல் பலருக்கும் இருந்ததாகக் கூறினார். ஆனால் தமிழக மக்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டால், அதை யாராலும் மாற்ற முடியாது என்பதை தற்போதைய அரசியல் உணர்த்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும், இந்தியா முழுவதும் பாராட்டும் வகையில் முதலமைச்சர் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், சட்டப்பேரவைத் தலைவர் என்ற முறையில் ஆட்சியின் செயல்பாடுகளை உற்றுக் கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.
பல்வேறு பத்திரிகைகளிலும் தற்போதைய ஆட்சி லஞ்சம் இல்லாமலும், மக்களுக்கு தொந்தரவு இல்லாமலும் செயல்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“எல்லாம் எனக்குத் தெரியும், நான் தான் அறிவாளி” என சிலர் நினைத்துக் கொண்டிருப்பதாகவும், ஆனால் அனைத்தும் கடவுளிடமிருந்தே வருகிறது என்றும் ஜே.சி.டி. பிரபாகரன் தெரிவித்தார்.
தொடர்ந்து விவிலியத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை மேற்கோள் காட்டிய அவர், அந்த வசனத்தின் படி நடந்ததால்தான் தற்போது இந்த ஆட்சி அமைந்துள்ளதாகவும் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam