Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 5, 16 மற்றும் 17-வது வார்டுகளில் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த வார்டுகளுக்கு உட்பட்ட பல தெருக்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதாகவும், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுது அல்லது விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தடை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
எனவே, விநியோகம் பாதிக்கப்பட்ட தெருக்களுக்கு நகராட்சி நிர்வாகம் அல்லது சென்னை குடிநீர் வாரியம் (CMWSSB) மூலம் லாரிகள் வழியாக உடனடியாக சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Hindusthan Samachar / vidya.b