Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இன்று திடீரென விலை குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,220-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.14,040 ஆகவும், சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.1,12,320 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.11,820 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,440 குறைந்து ரூ.94,560 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சவரன் ரூ.2 லட்சத்தை எட்டுமா என்ற எதிர்பார்ப்பும் அச்சமும் நகை வாங்குவோர் மத்தியில் நிலவி வருகிறது.
இதனிடையே, வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P