காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவமதிப்பு - இன்று மாலை நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம்
டெல்லி, 14 ஆகஸ்ட் (ஹி.ச.) உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கார்கே பங்கேற்றுச் சென்ற பின்னர், அந்த இடம் கங்கை நீரால் சுத்திகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது வெறும் சுத்தம் செய்யும் நடவடிக்கை அல்ல, மாறாக தீண்டாமை மனநிலையின்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவமதிப்பு - இன்று மாலை நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம்


டெல்லி, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கார்கே பங்கேற்றுச் சென்ற பின்னர், அந்த இடம் கங்கை நீரால் சுத்திகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது வெறும் சுத்தம் செய்யும் நடவடிக்கை அல்ல, மாறாக தீண்டாமை மனநிலையின் வெளிப்பாடு என்றும், ஒரு தலித் தலைவர் என்பதற்காகவே இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.

இது ஜனநாயகத்திற்கு எதிரான, பிற்போக்குத்தனமான மற்றும் சமூக நீதிக்கு எதிரான செயல் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் உயரிய பதவிகளில் ஒன்றான எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் உள்ள ஒரு மூத்த தலைவருக்கு இத்தகைய அவமரியாதை ஏற்பட்டிருப்பது, சமூகத்தில் இன்னும் சாதிய வேறுபாடு எந்த அளவுக்கு வேரூன்றியுள்ளது என்பதைக் காட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், இன்று மாலை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b