Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தலைமையில் தமிழக அரச கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தேர்தலின்போது தமிழக வெற்றி கழகம் கட்சியினர் அளித்த வாக்குறுதியானது விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாததையும்,காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீரைப் பெற உரிய நடவடிக்கை எடுக்காததையும்,மேகதாது அனையில் மெத்தனம் போக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது 300-க்கும் மேற்பட்ட நபர்கள் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
ஆளுகின்ற குதிரைப்பேர அரசு இன்று மக்களை ஏமாற்றிக் கொண்டு உள்ளது.
எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாத அரசாக உள்ளது.
கொடுத்த வாக்குறுதியான விவசாய கடன் தள்ளுபடி முழுமையாக இல்லை. 6 சிலிண்டர் குடும்பத்திற்கு இல்லை. இல்லத்தரசிகளுக்கு 2500 இல்லை.
படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு 4000 உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றாத அரசாக இருந்து வருகிறது.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் விலைவாசி உயர்வு, போதிய மழை இல்லாமல் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் இருந்து வருகிறது.
வெளியே உள்ளவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வருவார்கள். சட்டப்பேரவையில் ரீல்ஸ் ஆட்சி நடந்து கொண்டுள்ளது.
காவேரி தண்ணீர் மேகதாது விவகாரத்தை பற்றி முதலமைச்சர் வாய் திறப்பதில்லை.
நிதி பற்றாக்குறை எனக் கூறும் தமிழக வெற்றி கழக அரசு, ஏன் வாக்குறுதி மட்டும் அளித்தார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
Hindusthan Samachar / ANANDHAN