கர்நாடக மாநிலம் பல்லாரி பகுதியில் லேசான நிலநடுக்கம்
பெங்களூரு , 14 ஆகஸ்ட் (ஹி.ச.) கர்நாடக மாநிலம் பல்லாரி பகுதியில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பல்லாரி பகுதியில் மதியம் 1.38 மணியளவில் ஏற்பட்ட இந்
A


பெங்களூரு , 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

கர்நாடக மாநிலம் பல்லாரி பகுதியில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பல்லாரி பகுதியில் மதியம் 1.38 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகி உள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி 15.012 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.592 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்திருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் லேசானதாக இருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

பல்லாரி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA