Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை விமான நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தற்போது தான் பயணம் முடித்து திரும்பியிருப்பதால், பட்ஜெட் குறித்து பிறகு பேசுகிறேன். இதில் நிறைய விமர்சனங்களும் இருக்கின்றன. அதே நேரத்தில் பாராட்டத்தக்க விஷயங்களும் இருக்கின்றன.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து திமுகவின் நிலைப்பாட்டை திமுகதான் சொல்ல வேண்டும். என்னுடைய நிலைப்பாட்டை நான் என்றைக்கோ சொல்லிவிட்டேன்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து என்னுடைய சிந்தனையை நான் பல நாட்களாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தமிழகத்தின் நலனுக்காக தொகுதி மறுசீரமைப்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாது.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயம் அளித்த அறிவுரைகளின்படி நடப்பதுதான் இரு மாநிலங்களுக்கும் நல்லது. எனக்கு மக்களின் நலன்தான் முக்கியம்.
மக்கள் என்று சொல்லும்போது கர்நாடகமும் ஒன்றுதான், தமிழ்நாடும் ஒன்றுதான்.
காவிரி என்பது நம் எல்லோருக்குமான பொதுவான சொத்து. அதில் நட்புறவு நீடிக்க வேண்டும். தண்ணீர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அது இல்லாமல் ஒரு மாநிலம் மட்டும் தனியாக இருக்க முடியாது.
ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்தை முதலமைச்சர் புறக்கணித்தது குறித்த கேள்விக்கு, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இது மிகவும் பெருமையான ஒரு விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN