மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி வழக்கு : ஆக-20ல் அனைத்தும் மனுக்களும் விசாரிக்கப்படும் - உயர்நீதிமன்றம்
மதுரை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சொத்துக்களை முறைகேடாகப் பொது அதிகாரம் மற்றும் அடமானப் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கோயில் நிர்வாக அதிகாரி புகார் அளித்து உள்ளார். இதன் பேரில், சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமிக்கச்
Madurai High Court


மதுரை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சொத்துக்களை முறைகேடாகப் பொது அதிகாரம் மற்றும் அடமானப் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கோயில் நிர்வாக அதிகாரி புகார் அளித்து உள்ளார்.

இதன் பேரில், சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமிக்கச் சதித் திட்டம் தீட்டியதாக 19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரேமா, முத்துராணி, மற்றும் கவிதா உள்ளிட்ட 10 பேர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கூறினார்.

கோவில் தரப்பில், முன் ஜாமின் வழங்கக் கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம். அதையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டது .

பின்னர் நீதிபதி உத்தரவில், இந்த அனைத்து மனுக்களையும் விசாரணைக்காக வருகிற இருபதாம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / ANANDHAN