தமிழக காவல்துறை அதிகாரிகள் மூவருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு
சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.) குடியரசு தினத்தை முன்னிட்டு சீருடைப் பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ஜனாதிபதி பதக்கங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு வீர தீர செயலுக்கான பதக்கம், சிறப்பான சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் என பல்
Presidential medals announced


சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

குடியரசு தினத்தை முன்னிட்டு சீருடைப் பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ஜனாதிபதி பதக்கங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு வீர தீர செயலுக்கான பதக்கம், சிறப்பான சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான காவல்துறையினருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று காவல் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய் ஆனந்த் அவர்களுக்கு சிறப்பான சேவைக்கான பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. காவல் துறையில் அவர் ஆற்றிய நேர்மையான, அர்ப்பணிப்பு மிக்க பணியையும், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் அவர் காட்டிய திறமையையும் பாராட்டி இந்த விருது அளிக்கப்படுகிறது.

அதேபோல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.கே. ராமச்சந்திரன் மற்றும் உதவி கமாண்டென்ட் எஸ். குமார் ஆகிய இருவருக்கும் ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அவர்களின் நீண்டகால சேவை, செயல்பாடுகளில் வெளிப்படுத்திய சாதனைகள் மற்றும் நன்மதிப்பின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் இந்த உயரிய விருதுக்கு தேர்வாகியுள்ள மூன்று அதிகாரிகளுக்கும் தமிழக அரசும், காவல்துறை உயர் அதிகாரிகளும், சக காவலர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b