சாக்லேட், பிஸ்கெட் கொடுத்து 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – மளிகைக் கடைக்காரர் கைது
சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை சாலிகிராமம் பகுதியில், 11ஆம் வகுப்பு படிக்கும் மனவளர்ச்சி குறைபாடு கொண்ட மாணவிக்கு சாக்லேட் மற்றும் பிஸ்கெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் மளிகைக் கடைக்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரு
பாலியல்


சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை சாலிகிராமம் பகுதியில், 11ஆம் வகுப்பு படிக்கும் மனவளர்ச்சி குறைபாடு கொண்ட மாணவிக்கு சாக்லேட் மற்றும் பிஸ்கெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் மளிகைக் கடைக்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சற்று மனவளர்ச்சி குறைபாடு கொண்டவர் என கூறப்படுகிறது.

மாணவி தினமும் பள்ளிக்கு நடந்து செல்லும் போது, வழியில் உள்ள மளிகைக் கடையில் இருந்து சாக்லேட் மற்றும் பிஸ்கெட்டுகளை வாங்கி, அவற்றை பள்ளியில் தனது தோழிகளுக்கு வழங்கி வந்ததாக தெரிகிறது.

இதனால் சந்தேகமடைந்த ஆசிரியர், மாணவியிடம் சாக்லேட் மற்றும் பிஸ்கெட்டுகள் தினமும் எப்படி கிடைக்கின்றன என விசாரித்துள்ளார். அப்போது, பள்ளிக்கு வரும் வழியில் உள்ள மளிகைக் கடைக்காரர் தினமும் சாக்லேட் மற்றும் பிஸ்கெட் கொடுத்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர், உடனடியாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, மளிகைக் கடை நடத்தி வந்த பழனிசாமி (35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட பழனிசாமி மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P