Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களில் மதுபான கடைகளை மூட தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி, கடையநல்லூர் உள்ளிட்ட 4 தாலுகாக்களில் உள்ள அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மதுபான கூடங்களும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி மூடப்படும் எனவும், அன்றைய தினம் விற்பனை ஏதும் நடைபெறக் கூடாது எனவும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜித் சிங் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
மேலும், அன்றைய தினம் விதிகளை மீறி குறிப்பிட்ட தாலுகாக்களில் மதுபான விற்பனைகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN