ஜனநாயகத்தில் மக்கள் தான் மன்னர்கள் – திமுகவுக்கு தவெக பதிலடி
சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.) தங்களுக்கு வாக்களிக்காத மக்களை அவமதிக்கும் வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதாகக் கூறப்படும் கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தவெக தனது எக்ஸ் தளத்தில் வெளியி
Tvk


Nn


சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

தங்களுக்கு வாக்களிக்காத மக்களை அவமதிக்கும் வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதாகக் கூறப்படும் கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தவெக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“உங்களுக்கு நல்ல சாவே வராது” என ஜனநாயகத்தின் எஜமானர்களான பொதுமக்களைப் பார்த்து ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது திமுகவின் ஆணவத்தையும் அதிகாரப் பசியையும் வெளிப்படுத்துவதாக விமர்சித்துள்ளது.

தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்காத மக்கள் மீது இத்தகைய வன்மத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்துவது ஜனநாயக விரோத மனப்பான்மைக்கு மற்றுமொரு சான்று என்றும் தவெக தெரிவித்துள்ளது.

மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல், தங்களுக்கு ஏன் ஆதரவு குறைந்தது என்பது குறித்து சுயபரிசோதனை செய்யாமல், மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளது.

“மக்களைச் சபிக்கும் அரசியலை மக்கள் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள். ஜனநாயகத்தில் மக்கள் தான் மன்னர்கள். அவர்களைச் சபிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என தமிழக வெற்றிக் கழகம் தனது பதிவில் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ