Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாகச் சென்றடைய வேண்டும் என்றும், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வெற்றித் தலைவரின் தொலைநோக்குப் பார்வை – தென்மாவட்டங்களுக்கும் தொழில் வளர்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கடந்த மே 22-ஆம் தேதி தனியார் நிறுவன நிர்வாகத்திடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலீடு செய்ய முதல்வர் நேரடியாக வலியுறுத்தியதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ராமநாதபுரத்தில் ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய காலணி உற்பத்தித் தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் தெரிவித்துள்ளது.
தென்மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் தொடங்கப்படுவதன் மூலம், அப்பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் வேலைக்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலை குறையும் என்றும் அந்தப் பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“வேலைக்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலையை மாற்றி, சொந்த மண்ணிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கும் வெற்றிப் பாதையில் தமிழ்நாடு” என தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ