Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 14 ஆகஸ்ட் ( ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் முத்தாம்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அருண் மற்றும் நரேஷ் ஆகிய இருவரும் இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் இருவரும் புறவழிச்சாலையில் திடீரென யு-டர்ன் எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
யு-டர்ன் எடுத்து சாலையை கடக்க முயன்றபோது, பின்னால் வேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புறவழிச்சாலைகளில் திடீரெனத் திருப்பங்களை எடுப்பது மற்றும் அதிவேகம் காரணமாக இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b