சுதந்திரத்தை சுயராஜ்யமாக மாற்றி இந்தியாவை விஸ்வ குருவாக உருவாக்க வேண்டும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்
டெல்லி, 14 ஆகஸ்ட் (ஹி.ச.) சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆசாதி கா அம்ரித் மகோத்சவத்தின் கீழ் தொடங்கப்பட்ட ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்தில் நாடு முழுவதும் மக்கள் பங்கேற்று, இந்தியாவின் சுதந்திரத்தைக் குறிக்கும் வகையில் தங்கள் வீடுகளில் தேசியக் கொ
சுதந்திரத்தை சுயராஜ்யமாக மாற்றி இந்தியாவை விஸ்வ குருவாக உருவாக்க வேண்டும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்


டெல்லி, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆசாதி கா அம்ரித் மகோத்சவத்தின் கீழ் தொடங்கப்பட்ட ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்தில் நாடு முழுவதும் மக்கள் பங்கேற்று, இந்தியாவின் சுதந்திரத்தைக் குறிக்கும் வகையில் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நாட்டின் சுதந்திரம் ‘சுயராஜ்யமாக’ (சுயாட்சி) பரிணமிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர தினத்தின் முக்கியத்துவம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,

சுதந்திர தினம் நமது வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம். இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கோடிக்கணக்கான மக்களின் அர்ப்பணிப்பாலும் தியாகத்தாலும் பெறப்பட்டது.

இன்று கொண்டாட்டத்திற்கான நாளாக இருந்தாலும், இந்த சுதந்திரத்தை ‘சுயராஜ்யமாக’ மாற்றுவதற்கு நாம் உறுதி எடுக்க வேண்டும். நமது நாட்டை விஸ்வ குருவாக மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற புதிய உத்வேகத்துடன் பாடுபட வேண்டும்.

இந்த நாட்டின் கிராமங்கள், ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலனை உறுதி செய்வதன் மூலம் நமது நாட்டை மகிழ்ச்சியாகவும், வளமாகவும், செழிப்பாகவும் மாற்றுவதே நமது முயற்சியாக இருக்க வேண்டும்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக முழு பலத்துடன் பணியாற்ற இன்று நாம் உத்வேகம் பெற்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b