சுதந்திர தின விழா: தேசியக் கொடியேற்றும் முன் வந்தே மாதரம் பாட உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.) சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக் கொடியேற்றும் முன் ‘வந்தே மாதரம்’ பாடலும், கொடியேற்றிய பிறகு தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு ம
உயர்நீதிமன்றம்


சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக் கொடியேற்றும் முன் ‘வந்தே மாதரம்’ பாடலும், கொடியேற்றிய பிறகு தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சார்பில் இந்த அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.

‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த நடைமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளின் பதவியேற்பு நிகழ்ச்சியும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றுவதற்கு முன்பு வந்தே மாதரம் பாடலும், தேசியக் கொடியேற்றிய பின்னர் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என நீதிமன்றங்களுக்கு பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P