Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவள்ளூரில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.பொன்னையன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும், மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனம் காட்டும் தவெக அரசை கண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.பொன்னையன், “எந்த காலத்திலும் அதிமுகவில் எஸ்.பி.வேலுமணிக்கு செல்வாக்கு கிடையாது. அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஏமாற்றி, பணம் சேர்ப்பதில் மட்டுமே அக்கறை காட்டினார்” என குற்றம்சாட்டினார்.
மேலும், “இரட்டை இலைக்கு துரோகம் செய்யும் எந்த பேச்சாக இருந்தாலும் எம்ஜிஆரின் ஆவி பார்த்துக்கொள்ளும்” என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, தான் பல ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்ததாகவும், நிதித்துறையை நன்கு அறிந்தவர் என்றும் கூறிய பொன்னையன், தற்போதைய நிதியமைச்சர் ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆன நிலையில் அவரை வைத்து மதிப்பிட முடியாது என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam