மக்களவையில் திமுகவுக்கு தனி இருக்கை - சபாநாயகரை சந்தித்தது குறித்து விளக்கமளித்த கனிமொழி எம்.பி
சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.) நாடாளுமன்றத்தில் இடம் மாற்றம் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து பேசினோம் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர
மக்களவையில் திமுகவுக்கு தனி இருக்கை - சபாநாயகரை சந்தித்தது குறித்து விளக்கமளித்த கனிமொழி எம்.பி


சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

நாடாளுமன்றத்தில் இடம் மாற்றம் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து பேசினோம் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக விரிவாக பேசினார். திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்துவிட்டதால் நாடாளுமன்றத்தில் திமுகவின் இருக்கைகளை மாற்றித் தரக் கோரி சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறினார். இதன் தொடர்ச்சியாகவே சபாநாயகரை நேரில் சந்தித்து இடமாற்றம் குறித்து வலியுறுத்தியதாக விளக்கம் அளித்தார்.

மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள திமுக, இனி வரும் காலங்களில் தனது கருத்துக்களை சுதந்திரமாகவும், தனித்துவமாகவும் முன்வைக்க விரும்புகிறது என்றும், அதற்காகவே தனி இருக்கை ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக கடந்த மே 7-ம் தேதி சபாநாயகருக்கு கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டது சர்ச்சையாக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, சபாநாயகரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டதில் சர்ச்சையாக என்ன இருக்கிறது? அது ஒரு மரபு ரீதியான நிகழ்வு என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் தற்போது காங்கிரசின் இந்தியா கூட்டணியில் இல்லை. எங்களது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. கூட்டணி முறிவின் எதிரொலியாகவே நாடாளுமன்றத்தில் இருக்கை மாற்றம் கோரப்பட்டுள்ளது என்றும் சென்னையில் அளித்த பேட்டியில் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b