ஜனநாயக விழுமியங்களுக்கு மீண்டும் அர்ப்பணிக்க வேண்டும் - ஓய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி
அமராவதி , 15 ஆகஸ்ட் (ஹி.ச.) 80-வது சுதந்திர தினத்தையொட்டி, ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளி
A


அமராவதி , 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

80-வது சுதந்திர தினத்தையொட்டி, ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் :

நாட்டை கட்டியெழுப்புவதற்கு அடித்தளமாக விளங்கும் ஜனநாயக விழுமியங்களுக்கு அனைவரும் மீண்டும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களையும், போராட்ட உணர்வையும் நினைவுகூர்ந்து, அவர்களிடம் இருந்து உத்வேகம் பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒளிமயமான, அனைவரையும் உள்ளடக்கிய, வளமான இந்தியாவை உருவாக்க ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தினார். நாட்டின் எதிர்காலத்துக்காக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தனது வாழ்த்துச் செய்தியை ‘ஜெய் ஹிந்த்’ என்று கூறி அவர் நிறைவு செய்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA