குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
அமராவதி , 15 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பார்கவி (35). இவர் தனது 2 குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் நின்றிரா–திருத்தணி சாலையில் சென்று கொண்டிருந்தார். சி.என். கண்ட்ரிகா அருகே வந்தபோது, சாலையில் இருந்த வேகத்தடையை கடப்பத
A


அமராவதி , 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பார்கவி (35). இவர் தனது 2 குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் நின்றிரா–திருத்தணி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

சி.என். கண்ட்ரிகா அருகே வந்தபோது, சாலையில் இருந்த வேகத்தடையை கடப்பதற்காக பார்கவி ஸ்கூட்டரை மெதுவாக ஓட்டிச் சென்றார்.

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த மர்மநபர் ஒருவர், பார்கவியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை திடீரென பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.

இதுகுறித்து பார்கவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் நகையை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA