விகசித் பாரத் இலக்கில் ஆந்திராவுக்கு முக்கிய பங்கு - துணை முதல்வர் பவன் கல்யாண்
காக்கிநாடா , 15 ஆகஸ்ட் (ஹி.ச.) இந்தியா வலிமையான, திறன்மிக்க நாடாக உருவெடுத்து, உலகிற்கு தலைமை தாங்கும் நிலையை நோக்கி முன்னேறி வருவதாக ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தெரிவித்தார். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள போலீஸ் அணிவகுப்பு
A


காக்கிநாடா , 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

இந்தியா வலிமையான, திறன்மிக்க நாடாக உருவெடுத்து, உலகிற்கு தலைமை தாங்கும் நிலையை நோக்கி முன்னேறி வருவதாக ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் 80-வது சுதந்திர தின விழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

“இந்தியாவின் சுதந்திரத்திற்காக ஒரு தலைமுறை போராடியது.

அந்த சுதந்திரத்தை பாதுகாக்க மற்றொரு தலைமுறை தனது பங்களிப்பை வழங்கியது. இன்று இந்தியா வலிமையான மற்றும் திறன்மிக்க நாடாக வளர்ந்து, உலகிற்கு தலைமை தாங்கும் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ள ‘விகசித் பாரத்’ என்ற வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை அடைவதில் ஆந்திரப் பிரதேசமும் முக்கிய பங்காற்றும். மத்திய அரசுடன் முழுமையான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு, ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வோம்” என்று தெரிவித்தார்.

இந்த விழாவில் மாவட்ட உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA