வளர்ச்சியடைந்த இந்தியா கட்டமைப்பில் அனைவரும் பங்கேற்போம் - அமைச்சர் லோகேஷ்
அமராவதி , 15 ஆகஸ்ட் (ஹி.ச.) இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்: சாதி, மதம், பிராந்தியம் உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து ந
a


அமராவதி , 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்:

சாதி, மதம், பிராந்தியம் உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் சுதந்திர தின விழாவை தேசப்பற்றுடனும், புதிய உத்வேகத்துடனும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை இந்த நாளில் அனைவரும் நினைவுகூர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்கி, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் நாரா லோகேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

சுதந்திர தினம் நாட்டின் ஒற்றுமையையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தும் முக்கியமான நாளாகும்.

எனவே, வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்பதே அவரது செய்தியின் சாராம்சமாகும்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA