சுதந்திர தின விழா - சாதனையாளர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கிய முதல்வர் விஜய்
புதுச்சேரி, 15 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழக முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியேற்றி வைத்து, பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு தமிழக அரசின் உயரிய விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இந்த ஆ
Vijay Presents Special Awards to Achievers


புதுச்சேரி, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழக முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியேற்றி வைத்து, பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு தமிழக அரசின் உயரிய விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்த ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருது, தமிழகத்திற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது.

விருதுடன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

மருத்துவ சேவையில் சிறப்பாக பணியாற்றியதற்காக, நீரிழிவு நோய் நிபுணர் மருத்துவர் மோகன் அவர்களுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை முதலமைச்சர் விஜய் வழங்கி கௌரவித்தார். அவரது நீண்டகால மருத்துவ ஆராய்ச்சி மற்றும் விழிப்புணர்வு பணிகள் பாராட்டப்பட்டன.

அதே போல் துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, கோவையைச் சேர்ந்த நௌஷீன் பானு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தைரியமிக்க செயலுக்காக அவருக்கு இந்த விருதை முதலமைச்சர் விஜய் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b