Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
'தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் விஜய், முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
அதன்பின் ஆட்சி நிர்வாகம் சார்ந்து பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை முதல்வர் விஜய் மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில், நாட்டின் 80-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் விஜய் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியைத் முதல்வர் விஜய் ஏற்றி வைத்தார்.
இதற்காக அவர், இன்று காலை சுமார் 8 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்ததும், சென்னை காவல்துறையின் மோட்டார் சைக்கிள்கள் முன்னும் பின்னும் அணிவகுத்து அவரை கோட்டைக்கு அழைத்து வந்தனர்.
காலை சுமார் 8.35 மணியளவில் கோட்டை முன்பாக அமைக்கப்பட்டுள்ள அணிவகுப்பு மரியாதை ஏற்ற விஜய் மேடையை வந்தடைந்தார். அவரை தலைமைச் செயலாளர் சாய்குமார் வரவேற்றார். அதன்பிறகு மேடைக்கு வந்த விஜய், அங்கு காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு வருகை தந்தார். இந்த நிலையில் காலை 8.45 மணிக்கு கொடிக் கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முதல்-அமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் சுதந்திர தின உரையாற்றி வருகிறார்.
Hindusthan Samachar / vidya.b