Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில இளைஞர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாடு அரசின் 2026-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சரின் மாநில அளவிலான இளைஞர் விருதுகள், சமூக நலப்பணிகளில் சிறந்து விளங்கிய 3 இளைஞர்கள் மற்றும் 3 இளம் பெண்களுக்கு இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வழங்கப்பட்டன.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்கிப் பாராட்டினார்.
இவ்விழாவில் மாநில இளைஞர்களுக்கான விருதினை ஆண்கள் பிரிவில் இம்மானுவேல் நெல்சன், சரவணகுமார் மற்றும் நிர்மல் கதிர்வேல் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தங்களது துறைகளில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளை பாராட்டி இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
அதேபோல் பெண்கள் பிரிவில் மாநில இளைஞருக்கான விருதினை ராஜேஸ்வரி மகாதேவன் மற்றும் சிந்தா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
சாதனையாளர்களான இவர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டதோடு, மேடையில் அவர்களுக்கு பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.
Hindusthan Samachar / vidya.b