திருக்கோவிலூர் தொகுதிக்கு 2 புதிய ஆம்புலன்ஸ்கள் – தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய இ.பி.எஸ்
சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச) கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமி, தேர்தல் பிரசாரத்தின்போது தொகுதி மக்களின் பயன்பாட்டிற்காக இரண்டு ஆம்புலன்ஸ்கள் வழங்கப்படும
Eps


சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச)

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமி, தேர்தல் பிரசாரத்தின்போது தொகுதி மக்களின் பயன்பாட்டிற்காக இரண்டு ஆம்புலன்ஸ்கள் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், புதிதாக வாங்கப்பட்ட இரண்டு ஆம்புலன்ஸ்களின் சேவையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு அவசர மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் இந்த இரண்டு ஆம்புலன்ஸ்களும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / P YUVARAJ