Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளையும், நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த முன்னாள் படை வீரர்களையும் கௌரவிக்கும் வகையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் தற்போது ரூபாய் 23,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியமும் ரூபாய் 12,500 ஆக அதிகரித்து வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் படை வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான திருமண நிதியுதவித் தொகை ரூபாய் 25,000-ல் இருந்து இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு ரூபாய் 50,000 ஆக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மாற்றுத்திறனாளிகளான முன்னாள் படை வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவியும் ரூபாய் 7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தியாகிகளின் அர்ப்பணிப்பையும், வீரர்களின் சேவையையும் போற்றும் வகையில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்புகளுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b