சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சுதந்திரதின விழா!
சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் நடைபெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டங்களுக்கான நடைமுறையை திருத்தி உயர்நீதிமன்ற பதிவுத்துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்


சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் நடைபெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டங்களுக்கான நடைமுறையை திருத்தி உயர்நீதிமன்ற பதிவுத்துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

முன்னதாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்,

தேசியக்கொடி ஏற்றுவதற்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நடைமுறை தமிழகத்தில் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுக்கு முரணானது என்ற கருத்து எழுந்த நிலையில், தற்போது அந்த சுற்றறிக்கை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட புதிய சுற்றறிக்கையின்படி, சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட வேண்டும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு, தேசிய பாடலான வந்தே மாதரம் பாடப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்படும். கொடி ஏற்றப்பட்ட பின்னர் நிறைவாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற வரிசை முறை முறைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவதே விடுதலைக்குப் பிறகு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாகும். அந்த மரபை உறுதி செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த திருத்தப்பட்ட சுற்றறிக்கை அமைந்துள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை சுதந்திரதின விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

தொடக்கத்தில் தேசியப் பாடலான வந்தே மாதரம் மட்டுமே பாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கறிஞர்கள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று விழா நடைமுறை மாற்றப்பட்டு, இன்று காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா முறைப்படி ஆரம்பமாகி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.

Hindusthan Samachar / vidya.b