பிரதமர் மோடி தலைமையில் உலகிற்கு வழிகாட்டும் இந்தியா – நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு, 15 ஆகஸ்ட் (ஹி.ச.) 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தொன்மைச் சிறப்பும் நவீன வளர்ச்சியும் ஒருங்கே மிளிரும் இந்
நயினார்


தமிழ்நாடு, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தொன்மைச் சிறப்பும் நவீன வளர்ச்சியும் ஒருங்கே மிளிரும் இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்த தியாகிகளின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவதாகவும், அவர்களின் கனவுகள் இன்று நனவாகிக் கொண்டிருப்பதை காண முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாகவும், உலகிற்கே வழிகாட்டும் நாடாக இந்தியா உருவெடுத்து வருவது பிரதமரின் உழைப்புக்கு சான்றாகும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜாதி, மதம், மொழி ஆகிய வேறுபாடுகளைக் கடந்து ‘தேசியம்’ என்ற உணர்வால் அனைவரும் ஒன்றிணைந்து, வலிமையான பாரதத்தை வருங்கால தலைமுறைக்கு வழங்குவதே சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தியாகிகளின் கனவுகளையும், பிரதமர் மோடியின் லட்சியங்களையும் நனவாக்க தேசியக் கொடியின் கீழ் அணிவகுத்து, அன்னை பாரதத்தின் புகழை உலகெங்கும் பரப்புவோம் எனவும் நயினார் நாகேந்திரன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P