முதுமலையில் யானைகள் துதிக்கை தூக்கி சுதந்திர தின மரியாதை
நீலகிரி, 15 ஆகஸ்ட் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல துணை இயக்குனர் வித்யாதர் தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது கொடிமர
யானை


நீலகிரி, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல துணை இயக்குனர் வித்யாதர் தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது கொடிமரத்தின் அருகே வரிசையாக நின்றிருந்த செந்தில்வடிவு, பாமா, காமாட்சி, சேரம்பாடி சங்கர் மற்றும் செல்லமாக ‘பொம்மி’ என அழைக்கப்படும் ஆஸ்கர் நாயகி உள்ளிட்ட ஐந்து வளர்ப்பு யானைகள், தேசியக் கொடி ஏற்றப்பட்டதும் துதிக்கையை தூக்கி பிளிறி மரியாதை செலுத்தின.

தேசியக் கொடிக்கு யானைகள் மரியாதை செலுத்திய இந்த நெகிழ்ச்சியான காட்சி அங்கிருந்த சுற்றுலா பயணிகளை மெய்சிலிர்க்க வைத்தது. யானைகள் கொண்டாடிய சுதந்திர தின விழாவை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam