Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாக கூறப்படும் கருத்துகளுக்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து மிக மோசமான மற்றும் அருவருக்கத்தக்க வகையில் நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவினரின் அரசியல் பெண்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் அவதூறுகளை அடிப்படையாகக் கொண்டது என விமர்சித்துள்ள வன்னி அரசு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குறித்து பிரதமர் மோடி பேசியதாகக் கூறப்படும் கருத்துகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
காஷ்மீரில் ஆசிபா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தப்பட்டதாகவும், பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு வரவேற்கப்பட்டதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் நடிகை ஒருவர் குறித்து நயினார் நாகேந்திரன் தரம் தாழ்ந்து பேசியதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் வன்னி அரசு, பெண்களுக்கு எதிரான வெறுப்பும் அவதூறும் பாஜகவினரின் அரசியலின் அடிப்படையாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.
“நயினார் நாகேந்திரன் தனது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ