முதலமைச்சர் குறித்து நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு வேளாண்துறை அமைச்சர் வினோத் கண்டனம்
தஞ்சாவூர், 15 ஆகஸ்ட் (ஹி.ச.) முதலமைச்சர் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தரம் தாழ்ந்து, அநாகரிகமாகப் பேசியிருப்பதாகக் கூறி வேளாண்துறை அமைச்சர் வினோத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
வினோத்


தஞ்சாவூர், 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

முதலமைச்சர் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தரம் தாழ்ந்து, அநாகரிகமாகப் பேசியிருப்பதாகக் கூறி வேளாண்துறை அமைச்சர் வினோத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

அரசியல் களத்தில் கருத்தை எதிர்கருத்தால் எதிர்கொள்ளத் திராணியில்லாதவர்கள்தான் தனிப்பட்ட தாக்குதலையும், அநாகரிகமான வார்த்தைகளையும் பயன்படுத்துவார்கள் என விமர்சித்துள்ளார்.

மேலும், பதவியில் இருப்பவர் யாராக இருந்தாலும் முதலமைச்சரைப் பற்றி பேசுவதற்கு குறைந்தபட்ச அரசியல் நாகரிகமும், பொது மரியாதையும் இருக்க வேண்டும் என்றும், அதை மறந்து வாய்க்கு வந்தபடி பேசுவது நயினார் நாகேந்திரனின் தரத்தையே வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்கள் அரசியல் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்றும், ஆனால் அவதூறையும் அநாகரிகத்தையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அமைச்சர் வினோத் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நயினார் நாகேந்திரன் தனது தரம் தாழ்ந்த பேச்சை உடனடியாகத் திரும்பப் பெற்று, முதலமைச்சரிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலில் எதிரியாக இருக்கலாம்,அதற்காக நாகரிகத்தை எதிரியாக்கிக் கொள்ளக் கூடாது என்றும் அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P