கிழக்கு இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்
இந்தோனேசியா, 15 ஆகஸ்ட் (ஹி.ச.) கிழக்கு இந்தோனேசிய கடற்கரையில் இன்று அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தோனேசிய புவி இயற்பியல் ஆய்வு மையமான BMKG சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் ஒரு மீட்டர் உயரம்
Powerful earthquake in Eastern Indonesia


இந்தோனேசியா, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

கிழக்கு இந்தோனேசிய கடற்கரையில் இன்று அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தோனேசிய புவி இயற்பியல் ஆய்வு மையமான BMKG சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் ஒரு மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட அதிர்வுகள் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் நீடித்ததாகவும், நாகேகியோ மற்றும் பீமா போன்ற பகுதிகளில் வலுவாக உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அச்சத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். தேசிய பேரிடர் மீட்பு முகமையைச் சேர்ந்த டோடி யுலியோவா நிலநடுக்கத்தின் தீவிரத்தை உறுதிப்படுத்தினார்.

உடனடி சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

புளோரஸ் தீவில் உள்ள மௌமெரே நகரில் எடுக்கப்பட்ட காட்சிகளில், அலறல் சத்தத்திற்கு மத்தியில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுவது பதிவாகியுள்ளது.

எண்டே நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பாதுகாப்பு கருதி வெளியே அப்புறப்படுத்தப்பட்டனர்.

BMKG-ன் பதிவுகளின்படி, இந்த நிலநடுக்கம் 15 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது, அதைத் தொடர்ந்து பின் அதிர்வுகளும் உணரப்பட்டன.

அதே நேரத்தில் தங்கள் பிராந்தியத்திற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b