Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி வேப்பிலை பகுதியில் உள்ள கல் குவாரியில், அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 225 கிலோ வெடிமருந்துகள் மற்றும் 909 டெட்டனேட்டர்களை கியூ பிராஞ்ச் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிடைத்த தகவலின் அடிப்படையில் கியூ பிராஞ்ச் போலீசார் நடத்திய சோதனையில் இந்த வெடிமருந்துகள் சிக்கியுள்ளன.
மேலும், வெடிமருந்துகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டு, தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குவாரி உரிமையாளர் செல்வம் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏதேனும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் நோக்கில் வெடிமருந்துகள் பதுக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட வெடிமருந்துகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிமருந்துகளை அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ