வார விடுமுறை எதிரொலி -செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுப்பு
கள்ளக்குறிச்சி, 15 ஆகஸ்ட் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வார விடுமுறையை முன்னிட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்
சுங்கச்சாவடி


கள்ளக்குறிச்சி, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வார விடுமுறையை முன்னிட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இரண்டு நாட்கள் வார விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.

கார், வேன், பேருந்து உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் செங்குறிச்சி சுங்கச்சாவடியை நோக்கி வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக சென்னை–திருச்சி ஜிஎஸ்டி சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

நெரிசலைக் குறைக்கும் வகையில் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் எதிர்திசையில் உள்ள ஒரு வழித்தடம் தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் வாகனங்களுக்காக திறக்கப்பட்டு, கூடுதல் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர்.

அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam