Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 15 ஆகஸ்ட் (ஹி.ச)
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் குறைந்து வினாடிக்கு 4,500 கன அடியாக பதிவாகியுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்துள்ளதாலும் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு அளவீட்டு மையத்தில் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது அங்கு நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளதே ஒகேனக்கல்லின் இந்தச் சரிவுக்குக் மிக முக்கிய காரணமாகும்.
நீர்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் நீரின் ஆர்ப்பரிப்பு குறைந்து காணப்படுகிறது.
இதனிடையே நீர்வரத்து அதிகமாக இருந்தபோது பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதில் கட்டுப்பாடுகள் தொடர்ந்தாலும், நீர்வரத்து குறைவால் சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b