இலங்கைக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி- இந்திய அணி பேட்டிங் டாஸ் வென்ற சுப்மன் கில் பேட்டிங் தேர்வு
காலே, 15 ஆகஸ்ட் (ஹி.ச.) இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காலே சர்வதேச மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ்
A


காலே, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காலே சர்வதேச மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் களம் இறங்கினர்.

இந்திய அணி நிதானமாக ரன்களை சேர்த்து வந்த நிலையில், ஜெய்ஸ்வால் 47 ரன்களில் ரன்-அவுட் ஆனார். இதனால் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்தது.

தொடர்ந்து கே.எல். ராகுலுடன் தேவ்தத் படிக்கல் இணைந்து சிறப்பாக ஆடி வருகிறார்.

முதல் நாள் மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 32 ரன்களுடனும், தேவ்தத் படிக்கல் 35 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த போட்டி இந்திய அணியின் 600-வது டெஸ்ட் போட்டி என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA