முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அமைச்சர் லோகேஷ் புகழஞ்சலி
அமராவதி , 16 ஆகஸ்ட் (ஹி.ச.) முன்னாள் பிரதமரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து ச
A


அமராவதி , 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

முன்னாள் பிரதமரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தில் அவரது நினைவுக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறைகளின் வளர்ச்சியில் வாஜ்பாய் முக்கிய பங்காற்றியதாக நாரா லோகேஷ் புகழாரம் சூட்டினார்.

நாட்டின் அரசியல் களத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்த அவர், சிறந்த பேச்சாளராகவும், அனைவராலும் மதிக்கப்பட்ட தலைவராகவும் திகழ்ந்ததாக குறிப்பிட்டார்.

நாட்டின் முன்னேற்றத்துக்காக வாஜ்பாய் ஆற்றிய பணிகள் என்றும் நினைவுகூரத்தக்கவை என்று தெரிவித்த நாரா லோகேஷ், அவரது சேவைகளையும், நாட்டின் வளர்ச்சிக்காக அவர் அமைத்துக் கொடுத்த பாதையையும் இன்றைய தலைமுறையினர் நினைவுகூர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA