Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை வளாக விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு அகில இந்தியப் பணிகள் மற்றும் மத்தியப் பணி அதிகாரிகள் அமைப்பின் சார்பில் கிரிக்கெட் போட்டித் தொடர் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கிரிக்கெட் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,
அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைப்பதற்கும் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் விளையாட்டு மிகவும் அவசியம் என்றார்.
வரும் காலங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், நீதிபதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளை நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் விளையாட்டுத்துறைக்கான உட்கட்டமைப்புகளை மேலும் அதிகரித்து, தமிழகத்தை சர்வதேச தரத்திலான விளையாட்டுத் தலைநகரமாக மாற்றுவதே அரசின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
நடப்பு பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் சிறப்பாக கிரிக்கெட் போட்டியை ஒருங்கிணைத்து நடத்துவதாக பாராட்டிய அமைச்சர், இதேபோன்று சிறப்பான முறையில் போட்டியை நடத்தினால் அனைத்து எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மட்டுமின்றி முதலமைச்சர் விஜய் கூட கிரிக்கெட் விளையாட வருவார் என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam