நாகசக்தி அம்மன் பீடத்தில் ஆடி 5-வது வெள்ளியை முன்னிட்டு குபேர மகாலட்சுமி பூஜை
கோவை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.) கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் பீடத்தில் ஆடி மாத 5-வது வெள்ளியை முன்னிட்டு குபேர மகாலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி நாகசக்தி அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப
Aadi Velli


கோவை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் பீடத்தில் ஆடி மாத 5-வது வெள்ளியை முன்னிட்டு குபேர மகாலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி நாகசக்தி அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சிறப்பு பூஜையின் ஒரு பகுதியாக மகாலட்சுமிக்கு ஐஸ்வர்ய பெட்டகங்கள் வைத்து வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து 108 பெண்களுக்கு ஐஸ்வர்ய பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

மேலும், வலம்புரி சங்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு குங்குமம், வளையல், குங்குமச்சிமிழ் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

நிலவேம்பு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

பூஜை நிறைவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

ஆடி வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டால் நாகசக்தி அம்மன் பீடம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியது.

Hindusthan Samachar / ANANDHAN