கோவை மாணவர் அமுதன் கொலை வழக்கு - குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல்
கள்ளக்குறிச்சி, 16 ஆகஸ்ட் (ஹி.ச.) கோவை ஒத்தக்கால் மண்டபத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த அமுதன் என்ற மாணவன் கொடூரமாகத் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லூரியில் மாணவர்க
Kallakurichi


கள்ளக்குறிச்சி, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

கோவை ஒத்தக்கால் மண்டபத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த அமுதன் என்ற மாணவன் கொடூரமாகத் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கல்லூரியில் மாணவர்களிடையே இருந்த கஞ்சா புழக்கத்தை மாணவன் அமுதன் கல்லூரி நிர்வாகத்திடம் சொன்னதால் மாணவர்களில் ஒரு பிரிவினர் அமுதனைத் தாக்கி கொலை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் கல்லூரி நிர்வாகம் அதை மறுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அமுதனின் நண்பர் ஸ்ரீமன் அளித்த புகாரின் பேரில் செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டது.

இதில் 1 சிறார், 11 பேர் என மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமைச்சர்கள் சம்பத் குமார், வன்னியரசு மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அமுதன் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் உதவித்தொகையையும் கொடுத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சம்பத்,

அமுதன் குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக ரூ.6 லட்சம் நிவாரண நிதிக்கான ஆணையை இன்று வழங்கினோம்.

மேலும் அவர்கள் குடும்பத்திற்குப் பட்டா வழங்கும் ஏற்பாடு நடக்கிறது.

அதோடு அமுதனின் சகோதரருக்கு அரசு வேலை ஏற்பாடு செய்யும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.

வழக்கு குறித்து தீவிர விசாரணை நேர்மையான முறையில் நடக்கிறது. குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்லூரியில் போதை விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடந்து வருகிறது.

போதைக்கு எதிராக நடவடிக்கைகள் இந்த ஆட்சியில் மிகத்தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது என்றார்

Hindusthan Samachar / ANANDHAN