திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம் - அண்ணாமலையார் தரிசனத்திற்காக 3 மணி நேரம் காத்திருப்பு
திருவண்ணாமலை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.) திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட
Crowds of devotees flock to Tiruvannamalai


திருவண்ணாமலை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்திருந்தனர்.

இன்று அதிகாலை முதலே கோயிலின் நான்கு கோபுர வாயில்களிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

சாமி தரிசனத்திற்காக சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.

விடுமுறை நாள் என்பதால் குடும்பத்துடன் வந்திருந்த பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

கூட்ட நெரிசலை சமாளிக்க கோயில் நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பக்தர்கள் வரிசையில் நிற்பதற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

ஆயினும் நீண்ட நேர காத்திருப்பால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்கவும் கோவில் நிர்வாகமும், காவல்துறையினரும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b