வீட்டு சமையல் கேஸ் வாடிக்கையாளர்கள் இ-கே ஒய் சி சரிபார்ப்புக்கு ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு
சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.) வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் முறைகேடுகளை தடுக்கவும், போலி இணைப்புகளை கண்டறியவும், மானியம் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யவும் எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும
Deadline for domestic LPG customers to complete e-KYC verification extended until August 23.


சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் முறைகேடுகளை தடுக்கவும், போலி இணைப்புகளை கண்டறியவும், மானியம் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யவும் எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும் வாடிக்கையாளர் விவரங்களை மீண்டும் சரிபார்க்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

இந்த உண்மை சரிபார்ப்பு பணிக்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், பல வாடிக்கையாளர்கள் இன்னும் தங்கள் விவரங்களை புதுப்பிக்காததால் கால அவகாசம் ஆகஸ்ட் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் தங்களது அலைபேசியில் உள்ள அந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்தி எளிதாக இ-கேஒய்சியை பதிவு செய்யலாம். மேலும் அருகில் உள்ள கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்று ஆதார் அட்டை மூலம் கைரேகை வைத்தும் இந்த சரிபார்ப்பை மேற்கொள்ளலாம்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இ-கேஒய்சி செய்யாத வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் விநியோகம் மற்றும் மானியத் தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாடிக்கையாளர்கள் இந்த கூடுதல் அவகாசத்தை பயன்படுத்திக் கொண்டு உடனடியாக தங்கள் விவரங்களை பதிவு செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b