எண்ணூரில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் - த.வெ.க எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட மீனவர்கள்
சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆறு மற்றும் முகத்துவாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால், அதிர்ச்சியடைந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதுடன், தங்களத
மீன்கள்


சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆறு மற்றும் முகத்துவாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால், அதிர்ச்சியடைந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதுடன், தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரை மீனவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆற்றில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன; துர்நாற்றம் வீசுவதால் எங்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது.

அருகில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகளால் மீன்கள் இறந்திருக்கலாம். இதுகுறித்து தகவல் தெரிவித்தும் நீங்கள் நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர்.

மேலும், “மீனவர்கள் வாழ்வதா? சாவதா?” என வேதனையுடன் கேள்வி எழுப்பிய அவர்கள், மீன்கள் இறப்புக்கான காரணத்தை உடனடியாக கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Hindusthan Samachar / GOKILA arumugam