ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
தருமபுரி, 16 ஆகஸ்ட் (ஹி.ச.) தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 4,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,500 கன அடியாக அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து தற்
ஒகேனக்கல்


தருமபுரி, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று 4,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,500 கன அடியாக அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 8,000 கன அடியாக உள்ளது.

கர்நாடகா மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஆற்றில் நீரின் வேகம் மற்றும் மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும், ஆற்றின் கரையோர பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் இருக்குமாறும், தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், நீரின் அளவைப் பொறுத்து பரிசல் இயக்குவதற்கான தடை குறித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P