அறுந்து கிடந்த மின்வயரை மிதித்த 17 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
காஞ்சிபுரம், 16 ஆகஸ்ட் (ஹி.ச.) காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வல்லப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வரபிரசாத் (17). இவர் இன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்த நிலையில் கிடந்த மின்வயரை எதிர்பாராதவி
பலி


காஞ்சிபுரம், 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வல்லப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வரபிரசாத் (17). இவர் இன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு அறுந்த நிலையில் கிடந்த மின்வயரை எதிர்பாராதவிதமாக மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்பகுதியில் மின்வயர் அறுந்து மாதக்கணக்கில் கிடந்ததாகவும், அதனை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மின்வாரியத்தின் அலட்சியத்தால் சிறுவனின் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

இதையடுத்து மின்வாரியத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வாலாஜாபாத்–தாம்பரம் சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் செல்ல முடியாமல் நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அறுந்து கிடக்கும் மின்வயர்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான அலட்சியத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam